இன்புளூயன்சா' வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான பொதுத்தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் 'இன்புளூயன்சா' வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இந்த வைரஸ் காய்ச்சலால் இதுவரை 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளவேண்டுமென தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தபோதும், இந்த அறிவுரையை ஒருசிலர் முறையாக கடைபிடிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் பக்கத்து மாநிலமான புதுவையில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் அதிகரிக்க தொடங்கியிருப்பதன் காரணமாக, ஆரம்ப வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நாளை முதல் (16ம் தேதி) 26ம் தேதி வரை பத்து நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்தை பின்பற்றி தமிழகத்திலும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென பெற்றோர் மத்தியில் கோரிக்கை வலுப்பெற்றுள்ள நிலையில், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முன்கூட்டிய நடத்தி முடித்துவிடலாமா என பள்ளிகல்வித்துறை சார்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் கடைசி வாரத்தில் தொடங்கி ஏப்ரல் 24-ம் தேதி வரை நடைபெறயிருந்த பொதுத்தேர்வுகளை ஏப்ரல் 17-ம் தேதி முதல் தொடங்கலாமா என பள்ளிக்கல்விதுறை சார்பில் ஆலோசிக்கப்பட்டு, இதற்கான தகவல் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
முதல்வர் ஒப்புதல் கிடைத்தவுடன் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பொதுத்தேர்வை மார்ச் 17-ம் தேதி முதல் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக பள்ளிகல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.