விருத்தாசலம்: மதுபோதையில் மோதிக் கொண்ட அரசுப் பேருந்து ஓட்டுனர்கள்; பயணிகள் அதிர்ச்சி

விருத்தாசலம்: மதுபோதையில் மோதிக் கொண்ட அரசுப் பேருந்து ஓட்டுனர்கள்; பயணிகள் அதிர்ச்சி
விருத்தாசலம்:  மதுபோதையில் மோதிக் கொண்ட அரசுப்  பேருந்து ஓட்டுனர்கள்; பயணிகள் அதிர்ச்சி

மதுபோதையில் மோதிக் கொண்ட அரசுப் பேருந்து ஓட்டுனர்களால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் மோதிக் கொண்ட அரசுப் பேருந்து ஓட்டுனர்களால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றன. அதேபோல் நாள்தோறும் சுமார் 2000-த்திற்கும் மேற்பட்ட பயணிகள், விருத்தாச்சலம் பேருந்து நிலையம் வழியாக, உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு செல்வதற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து பணிமனையை சேர்ந்த, TN:45 N:4111 என்ற பேருந்து, சென்னையில் இருந்து, ஜெயங்கொண்டம் செல்வதற்காக, விருத்தாசலம் பேருந்து நிலையம் வந்தடைந்தது.
அப்பேருந்தின் ஓட்டுநரான மணிவண்ணன் (52) பயணிகளை இறக்கி விட்டு விட்டு, பேருந்து நிலையத்திலிருந்து, ஜெயங்கொண்டம் செல்வதற்காக பேருந்தை எடுத்துள்ளார். அப்போது விருத்தாசலம் அரசு போக்குவரத்து பனிமனையின் ஓட்டுநரும், திமுக கட்சியை சேர்ந்தவரும், திமுக கட்சியின் சங்கமான தொமுச உறுப்பினருமான, பொன்னிவளவன், குடிபோதையில் பேருந்தின் குறுக்கே சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனைப் பார்த்த  ஓட்டுநர் மணிவண்ணன், பேருந்தை திடீரென நிறுத்தி உள்ளார்.
மேலும்  குடிபோதையில் இருந்த திமுக கட்சியை சேர்ந்த ஓட்டுனர் பொன்னிவளவன், மேற்படி ஓட்டுனரை ஆபாசமாக திட்டி, தாக்க முற்பட்டுள்ளார். உடனடியாக மணிவண்ணன் கீழே இறங்கி வந்ததும், இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. 
அதன்பிறகு பொன்னிவளவன் என்பவருக்கு ஆதரவாக, விருத்தாசலம் பணிமனையை சேர்ந்த ஓட்டுநர்கள், நடத்துனர்கள் என சுமார் 5 நபர்கள், பேருந்தை எடுக்க விடாமல் நிறுத்தி உள்ளனர்.
இதனால் சுமார் அரை மணி நேரமாக, பேருந்து நிலையத்தின் வெளியே, மற்ற பேருந்துகள் செல்ல முடியாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து  தகவலறிந்து வந்த விருத்தாசலம் காவல்துறையினர்,  சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் மற்றும்,  நடத்துனர்களிடம் சமரசம் பேசியபின்பு, போக்குவரத்தை சரி செய்து, பேருந்தை அனுப்பி வைத்தார்கள். இச்சம்பவத்தால் விருத்தாச்சலம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com