தஞ்சை புதிய பேருந்துநிலையம் அருகில் வடமாநில நபர் ஒருவர் மதுபோதையில் ஒட்டகத்தை அடித்து துன்புறுத்தி பிச்சை எடுத்து வருவதாக மிருகவதை தடுப்பு சங்கத்திற்கு வந்த புகாரை அடுத்து மிருகவதை தடுப்பு சங்க தன்னார்வலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஒட்டகத்தை மீட்டு அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். உடல் முழுவதும் காயங்களுடன், உடல் மெலிந்து சோர்வாக இருந்த ஒட்டகத்திற்கு கால்நடை மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் ஒட்டகத்திற்கு உணவுகள் கொடுத்து பாதுகாப்பாக வைத்துள்ளனர். உரிய ஆவணங்களை காட்டினால் ஒட்டகம் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும். இல்லை என்றால் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்