அதிகபட்சமாக சென்னை மற்றும் கோவையில் 10 பேருக்கும், செங்கபட்டில் 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் 3 பேருக்கும், நீலகிரியில் 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடலூர், தருமபுரி, கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் திருச்சியை சேர்ந்த 27 வயது இளைஞர் கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் என நேற்று முன் தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.