திருச்சி மாநகரம், ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் அருகே சாலை ஓரத்தில் தினமும் 50 க்கும் மேற்பட்ட யாசகர்கள் உறங்குவார்கள். நேற்றும் வழக்கம்போல் யாசகர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக மது போதையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்துள்ளனர். அவர்கள் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த யாசகர்கள் மீது ஏறியது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த இருவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.