ஈரோடு மாவட்டம், பவானி பகுதியை சேர்ந்தவர் 27 வயதான கார்த்திக். 27 வயதான இவரது உறவுக்கார பெண் மீனா தேவி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது குழந்தையுடன் மீனா தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கார்த்திக்கிற்கும், மீனாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் கார்த்திக்கிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படவே அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். இது கள்ளக்காதலி மீனாவுக்கு தெரியவர ஆத்திரம் அடைந்தார்.