உங்களுடைய வெற்றியை காண உங்கள் பெற்றோர்கள் போல நானும் காத்திருக்கிறேன்...
தமிழகத்தில் பொது தேர்வு எழுத தயாராகி வரும் 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர்களுக்கு அறிவுரை கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்.....
என்னுடைய பேரன்புக்குரிய 10 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவர்க்கும் வணக்கம்.அனைவரும் தேர்வு எழுதும் "டென்ஷன் இருக்கீங்களா...எந்த டென்ஷனும் வேண்டாம்" எந்த பயமும் வேண்டாம்.இந்த தேர்வு சாதாரண தேர்வு தான்.இதனை சாதாரண தேர்வு போல் அணுகவேண்டும்.தேர்வில் கேட்கப்படும் எந்த கேள்விகளாக இருந்தாலும் பாட புத்தகத்தில் இருந்தது தான் வரும் அதனால் உறுதியாக இருக்க வேண்டும்.தன்னம்பிக்கையும்,மனஉறுதியும் இருந்தாலே தேர்வில் பாதி வெற்றி பெற்றதாக அர்த்தம்.
தேர்வு என்பது உங்களை பரிசோதிப்பதற்காக இல்லை உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று உயர்த்துவது அதனால் எந்த பயமும் இல்லாமல் தேர்வுகளை எழுதுங்கள்.தேர்வை பார்த்து பயப்பட வேண்டாம்.புரிந்து கொண்டு படியுங்கள்.விடைகளை தெளிவாக எழுதுங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.உங்களுடைய வெற்றியை காண்பதற்காக நானும் உங்களுடைய பெற்றோர்கள்,ஆசிரியர்களை போல காத்திருக்கின்றேன்.அனைத்து மாணவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் என கூறினார்