ரவுடிக்கு துப்பாக்கியால் பாடம் புகட்டிய காவல் ஆய்வாளர்...!
திருவாரூர் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்ட ரவுடி பூவனூர் ராஜ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள கமலாபுரத்தில் பூவனுர் ராஜ்குமார் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 6 பேரைத் தனிப்படை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி பிரவீன் தலைமறைவாக இருந்துள்ளார்.அவர் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்ட போலீசார் பிடிக்க முயன்றுள்ளனர்.அப்போது ரவுடி பிரவீன் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியால் சிறப்பு ஆய்வாளர் இளங்கோவைத் தாக்கிவிட்டுத் தப்பி ஓட முயன்றுள்ளார்.தற்காப்பிற்காக ரவுடி பிரவீனை போலீஸார் முழங்காலுக்குக் கீழ் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
இதனை அடுத்துச் சுடப்பட்ட குற்றவாளி பிரவீன் மற்றும் காயமடைந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் இளங்கோ ஆகிய இருவரையும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த திருவாரூர் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் காயமடைந்த ஆய்வாளர் இளங்கோவைச் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.