‘சமூக நீதிக்கு முதல் புள்ளி வைத்தது கிறிஸ்தவ அமைப்புகள் தான்’- சபாநாயகர் அப்பாவு பேச்சு

‘சமூக நீதிக்கு முதல் புள்ளி வைத்தது கிறிஸ்தவ அமைப்புகள் தான்’- சபாநாயகர் அப்பாவு பேச்சு
‘சமூக நீதிக்கு முதல் புள்ளி வைத்தது கிறிஸ்தவ அமைப்புகள் தான்’- சபாநாயகர் அப்பாவு பேச்சு

‘தமிழகத்தில் பட்டம் படித்தவர்கள் 52% இருக்கிறார்கள்‘

நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட 293 அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தொடுதிரை வகுப்புகளுக்கு  மைக்குடன் வெப் கேமரா வழங்கும் நிகழ்ச்சி இன்று ராதாபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அரசுப் பள்ளியில் ஆங்கில வழி கல்வி கற்பதற்கு வசதியாகவும், அறிவு சார் திறன் தொடுதிரை வசதி தொலைக்காட்சிக்கான வெப் கேமராவை பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.பின்னர் ஆசிரியர்களிடையே பேசிய அவர், ஆசிரியர் பணி அறப்பணி, ஆசிரியர்களிடம் கல்வி கற்ற பிள்ளைகள் பெரியவர்களாகி உயர்ந்த இடத்திற்கு வரும்போது, அது என் பிள்ளை என சொல்லுகின்ற உரிமை ஆசிரியர்களுக்கு மட்டும்தான் உண்டு. ஆசிரியர் பணிக்கு இணையாக வேறு ஏதும் இல்லை. 

தொடுதிரை அறிவு சார் வகுப்பறையில் கல்வி கற்பதன் மூலம் அரசு பள்ளிகள் மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் இணைய வசதியுடன் உலகத்துடன் தொடர்பு கொண்டு உலக அறிவையும் அரசு பள்ளி மாணவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.இதனால் 30 மாணவர்கள் படிக்கின்ற அரசு பள்ளியில் இனி 100 மாணவர்கள் அடுத்த ஆண்டு  பள்ளியில் சேர்வார்கள் என்பதில் ஐயமில்லை.

தமிழகத்தில் பட்டம் படித்தவர்கள் 52% இருக்கிறார்கள் என்றால், பல போராட்டங்களுக்குப் பின் தான் நமக்கு கல்வி கிடைத்தது. 1795 வரை தமிழகத்தில் யாரும் நிலம் வாங்க முடியாது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே இங்கு வாழும் சூழ்நிலை இருந்தது.

1895இல் தான் பிரிட்டிஷ் ஆட்சி வந்த பிறகு எல்லோரும் நிலம் வாங்கலாம் என சட்டம் கொண்டு வந்தார்கள்.1935இல் மெக்காலே பிரபு வந்த பிறகு தான் சமஸ்கிருதத்தில் இருந்த கல்வியை உள்ளூர் மொழியிலும் கற்றுக் கொடுக்கலாம் என சட்டம் கொண்டு வந்தார். புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்திய மெக்காலே பிரபு வந்தவுடன், கிறிஸ்தவ போதகர்கள் வருகிறார்கள். 

பள்ளிகளை ஆரம்பிக்கிறார்கள். பள்ளியிலே கிறிஸ்தவர்களுக்கு மட்டும் படித்துக் கொடுப்பேன் என சொல்லாமல் எல்லோரும் வாருங்கள் அனைவருக்கும் கல்வி கற்றுக் கொடுக்கிறோம் எனக் கூறியது, தமிழகத்தில் சிறுபான்மை கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மட்டும்தான். தமிழகத்தில் சமூக நீதிக்கு முதல் புள்ளி வைத்தது கிறிஸ்தவ அமைப்புகள் தான். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com