'ஸ்டெர்லைட்டைவிட என்எல்சி-யில் பிரச்னை அதிகம்' - பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்

'ஸ்டெர்லைட்டைவிட என்எல்சி-யில் பிரச்னை அதிகம்' - பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்
'ஸ்டெர்லைட்டைவிட என்எல்சி-யில் பிரச்னை அதிகம்' - பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்

என்எல்சியால் கிட்டத்தட்ட 5 மாவட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டு விட்டது

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை விட என்எல்சியால் பிரச்னைகள் அதிகம் எனப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில், என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம், 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலங்களைக் கையகப்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.

என்எல்சி நிறுவனத்தின் இந்த செயலை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போஸ்டர்கள் ஒட்டி  தனது எதிர்ப்பை தெரிவித்தனர். அந்த போஸ்டரில், ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும், கல்வித் தகுதிக்கு ஏற்ப நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து, பாட்டாளி மக்கள் கட்சி தரப்பில் கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "தமிழ்நாடு அரசு ஒரு பக்கம் விவசாயத்திற்குத் தனியாக பட்ஜெட் போடுகிறார்கள். மற்றொரு பக்கம் விவசாயிகளை அச்சுறுத்தி, துன்புறுத்தி, காவல்துறையை வைத்து நிலங்களைப் பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு அரசினுடைய விவசாயத்திற்கு எதிரான போக்கை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்"என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், "இது வெறும் நெய்வேலியைச் சார்ந்த என்எல்சி பிரச்னை கிடையாது. என்எல்சியால் கிட்டத்தட்ட 5 மாவட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. மேலும், அதனைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான் பாமக தொடர்ந்து என்எல்சியை எதிர்த்து கொண்டிருக்கிறது" என்றார்.

என்எல்சியால் கடலூர் மாவட்டத்தில் 8 அடிக்குக் கிடைத்த நிலத்தடிநீர், என்எல்சி வந்த பின்னர் 1,000 அடிக்குக் கீழ் சென்றுவிட்டது என்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை விட என்எல்சியால் பிரச்னைகள் அதிகம் என்றும் தெரிவித்துள்ளார். என்எல்சியால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது மட்டுமல்லாமல், வாழ்வாதாரம் பாதிக்கிறது, விவசாயம் பாதிக்கிறது.

மேலும், என்எல்சி விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முரண்பாடாக இருக்கிறார் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com