தமிழ்நாடு
விபரீத விளையாட்டு; மாணவரின் உயிர் பறிபோன சோகம்
விபரீத விளையாட்டு; மாணவரின் உயிர் பறிபோன சோகம்
உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வளாகத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஏற்பட்ட தகராறில் மூன்று மாணவர்கள் சேர்ந்து தாக்கியதில் தலை மரத்தில் மோதியதால் கொத்தனார் வேலை செய்யும் கோபி என்பவரது மகன் மவுலீஸ்வரன் தலையில் கடும் காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டுள்ள நிலையில், சாலை மறியலும் செய்துள்ளனர்.
முசிறி டிஎஸ்பி யாஸ்மின் சம்பவ இடத்திற்கு வந்து அந்த மூன்று மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
- ஷானு