சென்னை சைதாப்பட்டையில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது; சென்னையில் 200 இடங்களில் நடைபெறுகிறது. அப்போது பேசிய அவர், ’’H3N2 வைரஸ் காய்ச்சல் இந்தியா முழுவதும் பரவி வருகிறது. காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் நாள் ஒன்றுக்கு 2 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது 25ஆக அதிகரித்துள்ளது’’என அவர் தெரிவித்தார்.