ஆட்டின் ரத்தத்தைக் குடித்து அருள்வாக்கு - புத்தூர் குழுமாயி கோவிலில் குவிந்த 5,000 ஆடுகள்

ஆட்டின் ரத்தத்தைக் குடித்து அருள்வாக்கு - புத்தூர் குழுமாயி கோவிலில் குவிந்த 5,000 ஆடுகள்
ஆட்டின் ரத்தத்தைக் குடித்து அருள்வாக்கு - புத்தூர் குழுமாயி கோவிலில் குவிந்த 5,000 ஆடுகள்

முக்கிய நிகழ்வான குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி இன்று (மார்ச் 9) நடைபெற்றது.

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும். இதில், 'குட்டிக் குடி' திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. 
சோழ மன்னர்களின் குல தெய்வமாக வணங்கப்பட்டு தற்போது திருச்சி நகர காவல் தெய்வமாக விளங்கும் குழுமாயி அம்மன் கோவில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
குழுமாயி அம்மன் கோவில் 'குட்டிக்குடி' திருவிழா கடந்த பிப்ரவரி 22ம்தேதி காப்புக் கட்டுதலையடுத்து, மார்ச்  7 ஆம்தேதி காளியாட்டத்துடன் வெகுவிமரிசையாகத் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி இன்று (மார்ச் 9) நடைபெற்றது. 
முன்னதாக, இந்தத் திருவிழாவுக்காக திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் உள்ள கோவிலில் இருந்து பக்தர்கள் அம்மனை தேரில் வைத்து புத்தூர் மந்தைக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். ஓலைப்பிடாரி அலங்காரத்தில் இருந்த அம்மன் தேர் வண்ணாரப்பேட்டை, புத்தூர் அக்ரஹாரம் வடக்கு முத்துராஜா வீதி உள்ளிட்ட முக்கிய தெருக்கள் வழியாக வீதி உலா வந்தது. 
அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அம்மனுக்குத் தேங்காய், பழம், மாவிளக்கு வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இன்றைய நிகழ்ச்சியில் மந்தையில் இருந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை கொண்டு வந்திருந்தனர்.
முதலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு கிடா வழங்கப்பட்டது. பின்னர் முறைப்படி நங்கவரம் பண்ணை ஆடுகள் வழங்கப்பட்டு பின்னர் பொதுமக்களின் ஆடுகள் நேர்த்திக்கடன் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில், ஆட்டின் ரத்தத்தைக் குடித்து மருளாளி அருள்வாக்கு கூறினார்.
இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். புத்தூர், உறையூர், வயலூர் சாலை என அனைத்து இடங்களிலும் தொழிலதிபர்கள், விவசாய பெருங்குடிகள், பாமர மக்கள் ஆகியோர் பங்கேற்ற அன்னதானம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவுக்காக 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- ஷானு

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com