குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பரமக்குடி நகர் மன்ற உறுப்பினர் சிகாமணி, மறத்தமிழர் சேனை தலைவர் பிரபாகரன், ராஜா முகமது கயல்விழி, உமா, ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் எனக் கோரி வியாபாரிகள் கடைகளை அடைத்து கண்டன பொதுக்கூட்டம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, முழுமையான விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டுமெனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட அ.தி.மு.க பிரமுகர் சிகாமணியை கட்சியில் இருந்து நீக்கி, எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்நிலையில், மாணவி வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.