2 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நபரின் உடலைத்தோண்டி எடுத்து பிரேதபரிசோதனை - அதிகாரிகள் அதிரடி

2 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நபரின் உடலைத்தோண்டி எடுத்து பிரேதபரிசோதனை - அதிகாரிகள் அதிரடி
2 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நபரின் உடலைத்தோண்டி எடுத்து பிரேதபரிசோதனை - அதிகாரிகள் அதிரடி

மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதால் போலீசார் தீவிர விசாரணை

திருச்சி மாவட்டம், இருங்களூர் ஊராட்சிக்குட்பட்ட புறத்தாக்குடியில் வசித்து வந்த பாஸ்கர் என்பவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், மீண்டும் அவரது உடலைத்தோண்டி எடுத்து பிரேதபரிசோதனை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருங்களூர் ஊராட்சிக்குட்பட்ட புறத்தாக்குடியில் வசித்து வருபவர் பாஸ்கர். வயது 37. இவர் துணி தைக்கும் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி, பாஸ்கருக்கு  திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே சமயபுரம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால்,  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்னரே, வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இதனால், அவர் இயற்கை மரணம் அடைந்துவிட்டதாக நினைத்து அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் பிரேத பரிசோதனை செய்யவேண்டாம் என  மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டதின் பேரில் இறந்த பாஸ்கரின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அண்ணாநகர் அருகே உள்ள கல்லறைப்பகுதியில் பாஸ்கர் உடலை புதைத்துள்ளனர்.

இந்த நிலையில், பாஸ்கர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அவரது உறவினர்கள் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தனர். அதாவது, பாஸ்கரனின் பெரியப்பா மகன் செந்தில், அவரது உறவினர்கள் வேல்முருகன், ஆசைத்தம்பி, சின்னச்சாமி மற்றும் சுரேஷ் ஆகியோர் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில்  இறந்துபோன பாஸ்கரின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்யுமாறு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்பேரில், மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் சக்திவேல் முருகன், லால்குடி சராக காவல்துறை துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கம் தலைமையில்  20க்கும் மேற்பட்ட போலீசார், புரத்தாக்குடி அண்ணாநகர் பகுதியில் புதைக்கப்பட்ட பாஸ்கரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

இரண்டு வருடத்திற்குப் பின்பு சந்தேகம் மரணம் எனக் கூறி உடலை எடுக்கப்பட்ட இச்சம்பவத்தால் புறத்தாக்குடி அண்ணாநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாஸ்கரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com