மதுரை மாவட்டம், ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் சத்திபாண்டி. இவர் காட்டூரில் நடந்த கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இவர் தொடர்ந்து அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது 7க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த மாதம் 12-ம் தேதி 5 பேர் கும்பல் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் சத்திபாண்டியை கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக போலீசார் தீத்திபாளையம் சேர்ந்த காஜா உசேன், மணிகண்டன், செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சஞ்சய், அல்ஜபீர் கான், நாகர்கோவிலை சேர்ந்த சஞ்சய்ராஜா ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்து, கோவை சிறையில் அடைத்துள்ளனர்.