தாய் யானை உட்பட 2 யானைகள் உயிரிழந்ததை அறியாத இரு குட்டி யானைகள் சடலங்களைச் சுற்றிச் சுற்றி வந்தன
தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்துள்ளது.
தருமபுரி மாரண்டஅள்ளி காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் காட்டுப் பன்றிகளின் தொந்தரவு அதிகமாக உள்ளதால் விவசாயி அவரது நிலத்தில் மின்வேலி அமைத்துள்ளார். அப்பகுதிகளில் இரண்டு குட்டிகளோடு வந்த தாய் யானை உட்பட 5 யானைகள் கூட்டமாகக் கடந்த ஒரு மாத காலமாகச் சுற்றித்திரிந்து வந்துள்ளது.
இந்நிலையில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியைக் கடக்க யானைகள் முயன்ற போது மின்சாரம் தாக்கியதில் தாய் யானை உட்பட மூன்று யானைகள் இன்று உயிரிழந்துள்ளன. இரண்டு குட்டி யானைகள் உயிர் தப்பி உள்ளன. தாய் யானை உட்பட 2 யானைகள் உயிரிழந்ததை அறியாத இரு குட்டி யானைகள் சடலங்களைச் சுற்றிச் சுற்றி வந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக பாலக்கோடு வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இதுபோன்று மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.