வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: 'பீகாரில் தொடங்கிய வதந்தி' முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: 'பீகாரில் தொடங்கிய வதந்தி' முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: 'பீகாரில் தொடங்கிய வதந்தி'  முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை

'வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திபரப்புவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்'

'வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திபரப்புவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்' என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துளளார்.

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுதாக வெளியான வதந்தியை அடுத்து, 3 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு இது. இதனை நம்மைவிட வடமாநிலையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வாழும் மக்களே அழுத்தமாக சொல்வார்கள். தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத மேடையில் பேசிய வடமாநிலத்தின் பெண் ஒருவர் பேசிய பேச்சு ஒன்று சமூக ஊடகங்களில் சமீபத்தில் அதிகம் பரவியது.

'வாய் பேச முடியாத தனது குழந்தையை தூக்கிக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வாழ வந்த நான், ரேஷன் கார்டு பெற்று, அதன் மூலமாக முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சிகிச்சையை இலவசமாக செய்து வைத்தேன். இப்போது என் குழந்தை பேசுகிறது. இதற்கு தமிழ்நாடுதான் காரணம்' என்று அளித்த பேட்டியானது யாராலும் மறக்க முடியாதது.

வர்த்தகத்திற்காக - தொழிலுக்காக - மருத்துவத்திற்காக - கல்விக்காக - வேலைக்காக என பல்வேறு மாநில மக்கள் தமிழ்நாட்டுக்கு வருவது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. அவர்கள் தாங்களும் உயர்ந்து, தமிழ்நாட்டையும் உயர்த்தி இருக்கிறார்கள்.  சமீபகாலமாக வேலைவாய்ப்புகளை தேடி அனைத்து மாநில தொழிலாளர்களும் தமிழ்நாட்டுக்கு வருவது அதிகரித்து வருகிறது.

சேவைத் துறைகள் கட்டுமானம் சிறு மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் என பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் தமிழ்நாடு திகழ்வதுதான் இதற்கு காரணம்.

தமிழ்நாட்டுக்கு சென்றால் வேலை கிடைக்கும், அமைதியான வாழ்க்கை அமையும் என்பதை இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வருவதற்கு காரணமாகும். இவ்வாறு நம்பிக்கையோடு வருகை தரும் அனைத்து மாநில தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசு செய்துதருவோடு  தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் கூறிய சலுகைகளையும் பாதுகாப்பிலும் உறுதி செய்து வருகிறது.

கொரோனா இரண்டாவது அலையின்போது சொந்த மாநிலத்துக்குத் திரும்பி செல்ல விரும்பிய வடமாநில தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் மாவட்டம் தோறும் கட்டுப்பட்டு அறைகள் உருவாக்கப்பட்டன. சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை, சேலம் மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் உருவாக்கப்பட்டன.

சென்னை பெருநகர மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து அந்த தொழிலாளர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு போக்குவரத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. இவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த முகாமுக்கு நானே சென்று பார்த்து அவர்கள் கூறிய வசதிகள்  செய்துதரப்பட்டதை உறுதி செய்தேன்.

அதேபோல் குடும்ப அட்டை இல்லாத, வேலைகளை இழந்த 1 லட்சத்து 29 ஆயிரத்து 440 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது. அனைத்து மாநில தொழிலாளர்களுக்கு பணிக்காலத்தில் ஏற்படும் விபத்து இழப்பீடாக 1.4.2021 முதல் இதுவரை 6.27 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

கட்டுமான தொழில் அவர்கள் பணிபுரியும்போது பாதுகாப்பாக பணியையும் விபத்துக்களை தவிர்க்கவும் அவர்களுக்கு உரிய விழிப்புணர்வு பயிற்சி முகாம்களும்  நடத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், இதுவரை 456 பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் 43 ஆயிரம் தொழிலாளர்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் தங்களது பெயர்களை பதிவு செய்ய வழியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைதியான சூழ்நிலையை காணப் பொறுக்காத சிலர், அரசுக்கு கட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சூழ்ச்சி  செய்கிறார்கள்.

அவர்களது எண்ணம் ஈடோறாது. இங்குள்ள அனைத்து மாநில தொழிலாளர்களும் இயல்பான சூழ்நிலை தெரியும். அதனால்தான் தற்போதும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு தொழிலாளர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை தமிழ்நாடு எப்போதும் போல் வரவேற்கிறது.

வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களையும் படங்களையும் தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வேண்டும் என்றே வதந்தி பரப்பி அச்சத்தையும் பீதியையும் பரப்புவர்கள் மீது  சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவர்கள் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பவர்கள். இல்லாத ஒரு பிரச்சனையை வைத்து இப்படி கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்துக்குரியது.

வடமாநில தொழிலாளர் தோழர்கள் எவ்வித அச்சமும் அடையவேண்டாம். அப்படி யாராவது உங்களை அச்சுறுத்தினால் காவல்துறையின் உதவி எண்கள்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் அரணாக இந்த அரசும், தமிழ்நாடு மக்களும் இருப்பார்கள். தவறான செய்திகளின் அடிப்படையில் நீங்களும் எவ்வித  அச்சமும் கொள்ளவேண்டாம்  என்று கேட்டுக்கொள்கிறேன்.

பீகாரைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் வேறு ஏதோ மாநிலத்தில் நடந்த இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான மோதலை தமிழ்நாட்டில் நடந்ததை போல பரப்பியதே இதன் தொடக்கமாக அமைந்துள்ளது.

எனவே, ஊடகங்கள் தொலைக்காட்சி நிறுவனங்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் ஊடக நெறிமுறைகளோடு செய்திகளை வெளியிட வேண்டும்.

பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுதொடர்பாக நான் பேசியிருக்கிறேன். அனைத்து தொழிலாளர்களும் எங்கள் தொழிலாளர்கள் என்பதையும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்து வருபவர்கள் என்பதையும் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இங்கு நேராது என்பதையும் உறுதியாக கூறியிருக்கிறேன். 

இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com