திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதலா? வதந்தி பரப்பியவர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை

திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதலா? வதந்தி பரப்பியவர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை
திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதலா? வதந்தி பரப்பியவர்கள் மீது பாய்ந்த  நடவடிக்கை

வதந்தி பரப்பிய 3 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு

தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக வதந்தி பரப்பிய 3 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 
தமிழ்நாட்டில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள், வாகன பழுது பார்ப்பு, ஜவுளி உற்பத்தி என அனைத்து நிலைகளிலும் வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் வடமாநிலத் தொழிலாளர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியது. 
ஆனால், 'அவரை யாரும் அடித்துக்கொலை செய்யவில்லை. அவர் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் தவறி விழுந்து விபத்தில் மரணமடைந்துள்ளார்' என காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் விளக்கமளித்துள்ளது. 
மேலும், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் நிலவியது. பதட்டமும் ஏற்பட்டது. இவ்வாறு வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், காவல் கண்காணிப்பாளர் சஷாங்க் சாய் மற்றும் மாநகர காவல் ஆணையர் அபிஷேக் குப்தா ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில், வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பொய் செய்தி பரப்பியதாக 3 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் டெய்னிக் பாஸ்கர் என்ற பத்திரிகை மீதும் திருப்பூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 'தன்வீர் போஸ்டர்' என்ற பத்திரிகை உரிமையாளர் முகமது தன்வீர் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
அதேபோல தூத்துக்குடி மாவட்டம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் பிரசாந்த் குமார் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மூவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com