தலைமைத் தகவல் ஆணையர் பதவி: இறையன்பு ஐ.ஏ.எஸ்ஸை சுற்றி என்ன நடக்கிறது?

தலைமைத் தகவல் ஆணையர் பதவி: இறையன்பு ஐ.ஏ.எஸ்ஸை சுற்றி என்ன நடக்கிறது?

தலைமைத் தகவல் ஆணையர் பதவி: இறையன்பு ஐ.ஏ.எஸ்ஸை சுற்றி என்ன நடக்கிறது?

தலைமைத் தகவல் ஆணையர் பொறுப்புக்கு இறையன்பு விண்ணப்பித்துள்ளார்

தமிழ்நாட்டின் புதிய தகவல் ஆணையரை தேர்வு செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்ஸின் பெயர் பரிசீலிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தலைமைச் செயலாளராக இறையன்பு  நியமிக்கப்பட்டார். வரும் ஜூன் மாதத்துடன் இறையன்பு ஐ.ஏ.எஸ்., ஓய்வு பெறவுள்ள நிலையில், பிப்ரவரி 28 ஆம் தேதியுடன் விருப்ப ஓய்வில் செல்ல இறையன்பு விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், அவர் விருப்ப ஓய்வில் செல்வதை முதலமைச்சர் ஸ்டாலின் விரும்பவில்லை எனவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, ஜூன் மாதம் இறையன்பு ஓய்வு பெற்றாலும், தி.மு.க அரசின் நிர்வாகத்தில் அவர் தொடர்ந்து பணியாற்ற வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் விரும்புவதாகவும் பேச்சு எழுந்தது.
இதனால், தலைமைச் செயலாளர் பதவியில் மீண்டும் இறையன்பு தொடரும் வகையில் அவருக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க அரசு நினைத்தாலும், 'அரசு ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது' என்ற புதிய அரசாணையால் இறையன்பு அதனை ஏற்க விரும்பவில்லை என தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்பட்டது.
இதனால் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் பதவிக்கு அடுத்தபடியாக பார்க்கப்படும் தலைமைத் தகவல் ஆணையர் பொறுப்பில் இருந்த ராஜகோபால் ஐ.ஏ.எஸ், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்ற நிலையில், 4 மாதங்களாக இந்த பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. 
தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் 4 தகவல் ஆணையர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை நியமிப்பதற்காக தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், 'தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் 4 தகவல் ஆணையர்களின் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட பெயர்கள் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று அரசிதழில் வெளியிடப்படும்'  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தலைமைத் தகவல் ஆணையர் பொறுப்புக்கு தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாபு

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com