மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மருந்து நிறுவனப் பிரதிநிதியான இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். பல லோன் ஆப்கள் மூலம் ரூ.20 லட்சம் வரை கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது மனைவி இதனைப் பலமுறை கண்டித்தும் வினோத் குமார் அதனைக் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடனை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தாலும், பணத்தை இழந்த காரணத்தாலும் அவர் பெரும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், கணபதி காலனியில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.