மனைவிக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்ற கணவன் ; கள்ளக்காதலி உட்பட3 பேர் கைது!

மனைவிக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்ற கணவன் ; கள்ளக்காதலி உட்பட3 பேர் கைது!
மனைவிக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்ற கணவன் ; கள்ளக்காதலி உட்பட3 பேர் கைது!

மனைவியை கொல்ல முயன்ற கணவன் மற்றும் கள்ளக்காதலியை சம்பவ இடத்துக்கே சென்று கைது செய்த போலீசார்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவர் தனியார் மருத்துவமனையில் கேட்டரிங் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா மற்றும்  மகனுடன்  அன்னூரில் வசித்து வருகிறார்.
ஸ்ரீதரனுக்கும், அவருடன் வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்ப்பட்டு,  நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. இதை கீர்த்தனா கண்டித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீதரன் கீர்த்தனாவை தாக்கி உள்ளார்.
இந்தநிலையில்  கணவர் உள்பட 3 பேர் தனக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றதாக, கீர்த்தனா அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் விசாரணை செய்தனர். இதில்  ஸ்ரீதரன் உட்பட  3 பேர் சேர்ந்து கீர்த்தனாவுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து  ஸ்ரீதரன் மற்றும்  தலைமறைவான ரம்யா மற்றும் அவரது நண்பர் பழனி ஆகியோரையும் சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com