தமிழ்நாடு
திருவாரூரில் திடீர் தீ விபத்து ; 5 வீடுகள் எரிந்து சேதம்!
திருவாரூரில் திடீர் தீ விபத்து ; 5 வீடுகள் எரிந்து சேதம்!
தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து போராடி தீயை அணைத்த தீயணைப்புத்துறையினர்
திருவாரூரில் மடப்புரம் அம்பேத்கர் நகர் பகுதியில் நகராட்சியில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடியிருப்புகள் உள்ளது. அங்கு அருள்மணி என்பவரது வீடு திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அருகில் இருந்த அடுத்தடுத்து வீடுகளுக்கும் தீ பரவியது.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.தீ விபத்தில் 4 கூரை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.