முதியவருடைய பெயரை ஒரு கிராமத்திற்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தாழையூத்து பொன்னி தண்டா பகுதியைச் சேர்ந்தவர் பொன்னையன் (105).இவருடைய மனைவி பாப்பாத்தி [95] கடந்த வருடம் இறந்து விட்டார்.இவருக்கு ரங்கநாதன் [78]காமராஜ் [75] என்ற இரண்டு மகன்களும்,சாரதா [70] பில்லி[67] என்ற இரு மகள்களும் உள்ளனர். நான்கு தலைமுறைகளைக் கடந்தும் தனக்குத் தேவையான அனைத்தையும் தானாகவே செய்து கொள்கிறார்.
தினந்தோறும் காலை 10 மணிக்கு பொன்னிதண்டா பகுதியிலிருந்து அரசுப் பேருந்தில் செங்கம் பகுதிக்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.களி, கூழ், சாப்பாடு என அனைத்து வகையான உணவையும் சாப்பிட்டு வருகிறார். இவர், இதுவரை ஒரு முறை கூட மருத்துவமனைக்குச் சென்றதில்லை என கூறுகிறார்.
தற்போதுள்ள உணவுப் பழக்க வழக்கத்தால் மாதத்திற்கு ஒரு முறையாவது ஏறக்குறைய அனைவரும் மருத்துவமனைக்குச் சென்று வருகின்றனர்.'100 வயதைக்' கடந்தும் முதியவர் பொன்னையன் யாருடைய உதவியும் இல்லாமல் தனியாகவே நடந்து சென்று தனக்கு வேண்டிய உணவுகளை வாங்கி சாப்பிட்டு வருவது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அந்த பகுதியின் மூத்த குடிமகன் என்பதால் முதியவருடைய பெயரை ஒரு கிராமத்திற்கு அந்த பகுதி மக்கள் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.