'ரவுடியின் காலை துளைத்த துப்பாக்கி குண்டுகள்'...காவல் ஆய்வாளர் அதிரடி நடவடிக்கை!

'ரவுடியின் காலை துளைத்த துப்பாக்கி குண்டுகள்'...காவல் ஆய்வாளர் அதிரடி நடவடிக்கை!
'ரவுடியின் காலை துளைத்த துப்பாக்கி குண்டுகள்'...காவல் ஆய்வாளர் அதிரடி நடவடிக்கை!

ரவுடியை சுட்டுப் பிடித்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

மதுரை வளர் நகர் அருகே ராஜீவ்காந்தி நகர்ப் பகுதியில் கடந்த 22ம் தேதி உலகனேரியை சேர்ந்த பாலமுருகன் என்ற டோராபாலா கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கினை மாட்டுத்தாவணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வினோத், மாரி, விஜயராகவன், சூர்யா, ஜெகதீஸ்வரன் 5 பேரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.

முதல் குற்றவாளியாக பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய பிரபல ரவுடியான  வண்டீயூரை சேர்ந்த  வினோத் என்பவரைக் கைது செய்தனர்.கொலை சம்பவம் நடந்த  பகுதி மற்றும் பதுங்கியிருந்த  இடம் குறித்து அடையாளம் காட்டுவதற்காக வினோத்தை அழைத்துச் சென்றுள்ளனர்.திடீரென அங்குப் பதுக்கி வைத்திருந்த அரிவாளால் முதல்நிலை காவலரை வெட்ட முயன்றுள்ளார்.அங்கு பணியிலிருந்த ஆய்வாளர் ரவுடி வினோத்தின் காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார்.காயமடைந்த ரவுடி வினோத்தை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.காவல்துறையினரை வெட்ட முயன்ற ரவுடியை சுட்டுப் பிடித்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com