இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!
கடலூர் மாவட்டம் வடலூர் பண்ருட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். 75 கிலோ பிரிவில் மேடை ஏற தயாராக இருந்த சேலம் மாவட்டம் பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சார்ந்த ஹரிஹரன் 21 மேடை ஏறுவதற்கு முன்பாக (வாம் அப் ) செய்துள்ளார்.உடலைத் தயார் செய்யப் பயிற்சி செய்து கொண்டிருந்த போது சம்பவ இடத்தில் திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் .அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து வடலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ளச் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.