வெற்றிச்செல்வனை கைது செய்து போலீசார் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம்,கந்திலி அருகே கசிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம்(62).அதே பகுதியில் டைலர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு வெற்றி செல்வன்(36) என்ற மகனும், கோமதி என்ற மகளும் உள்ளனர்.
மேலும் வெற்றி செல்வன் சிஏ முடித்து சென்னையில் உள்ள ஆடிட்டரிடம் உதவியாளராக வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் ஆதிமூலத்துக்குச் சென்னையில் சொந்தமாக மற்றொரு வீடு உள்ளது.
அந்த வீட்டை விற்று பணத்தைத் தர வேண்டும் அல்லது விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கி தர வேண்டும் என அவ்வப்போது தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்வெற்றி செல்வன்.
இந்த நிலையில் மீண்டும் ஆதி மூலம் நடத்தி வந்த டைலர் கடைக்குச் சென்ற வெற்றிச்செல்வன் திரும்பவும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வெற்றிச்செல்வன் தாய் வெங்கடேஷ்வரி கண் எதிரே தந்தை ஆதிமூலத்தைக் கடையில் இருந்த கத்தரிக்கோலைக் கொண்டு 14 இடங்களில் சரமாரியாக கொடூரமாகக் குத்தி அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இந்த தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய ஆதிமூலத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காகத் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து டிஎஸ்பி கணேஷ் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு சென்னைக்குத் தப்பியோட முயன்ற வெற்றிச்செல்வனை திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் சுற்றி வளைத்துப் பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.