இனி குழந்தைகளை 6 வயதில் தான் 1ம் வகுப்பில் சேர்க்க முடியும் - மத்திய அரசு நடவடிக்கை

இனி குழந்தைகளை 6 வயதில் தான் 1ம் வகுப்பில் சேர்க்க முடியும் - மத்திய அரசு நடவடிக்கை
இனி குழந்தைகளை 6 வயதில் தான் 1ம் வகுப்பில் சேர்க்க முடியும் - மத்திய அரசு நடவடிக்கை

முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயதை 6-க்கு மேல் மாற்றியமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து குழந்தைகளுக்கும் தரமான 3 ஆண்டுகள் மழலையர் கல்வி கிடைக்க ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, கடந்த அக்டோபர் மாதம் 20-ம் தேதி அடித்தள நிலைக்கான பாடத்திட்ட கட்டமைப்பை ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிமுகம் செய்தது. இந்நிலையில், நாட்டில் மழலையர் கல்வி குறிக்கோளை அடைய, கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை கடந்த 9-ம் தேதி அன்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில் பள்ளிக் கல்வியில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயதை 6-க்கு மேல் மாற்றியமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளை 3 வயதில் மழலையர் வகுப்பில் சேர்க்கலாம் எனவும் 3 ஆண்டுகளுக்கு ப்ரீ- கேஜி, எல்கேஜி, யுகேஜி ஆகிய வகுப்புகளை அவர்கள் படிக்க வேண்டும் என்றும் வழிமுறைகளில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், பள்ளிக் கல்விக்கு முந்தைய மழலையர் கல்வியில் 2 ஆண்டு பட்டயப் படிப்பை வடிவமைத்து நடத்துமாறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பாடத்திட்டம், மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் வடிவமைக்கப்பட்டு மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com