ஒடிசாவில் ஃபனி புயல் நாசம் செய்துவிட்டு சென்றுள்ளது. இதில் வீடு இழந்த குடும்பம் கழிவறையை வீடாக்கி வசித்து வருகிறது.
ஒடிசாவில் ஃபனி புயல் நாசம் செய்துவிட்டு சென்றுள்ளது. இதில் வீடு இழந்த குடும்பம் கழிவறையை வீடாக்கி வசித்து வருகிறது.
ஒடிசாவை ஃபானி புயல் தாக்கியது. இதில் அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை இழந்தனர். உடமைகளை இழந்தனர். மேலும் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் கன்ட்ரபாரா பகுதியை சேர்ந்த கிரோட் ஜெனா என்பவரது வீடும் சேதம் அடைந்தது. இவர் தனது குடும்பத்துடன் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கழிவறையில் தஞ்சம் புகுந்தார். அவரது குடும்பத்தில் 4 பேர். இதில் 3 பேர் பெண்கள். அவர்கள் தற்போது கழிவறையில்தான் வசித்து வருகிறார்கள்.
இதுபற்றி ஜெனா கூறுகையில், எங்கள் வீடு மண்ணால் கட்டப்பட்டது. சூறாவளி காற்றால் இது முழுவதும் சேதமடைதுவிட்டது. யாரும் எங்களை அவர்கள் வீடுகளில் தங்க அனுமதிக்கவில்லை. எனவே கழிவறையில் தங்க முடிவு செய்தோம் என்றார்.
மேலும் இளம் வயதுடைய என் இரண்டு மகள்களுக்கும், என் மனைவிக்கும் இரவில் பாதுகாப்பு கிடையாது. எனவே நான் பாதுகாப்புக்காக வெளியே படுத்துக் கொள்வோம். துர்நாற்றத்தை தாக்குப்பிடித்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்று வேதனையுடன் கூறினார்.