கந்து வட்டி கொடுமை! நாகர்கோவிலில் 4 பேர் தற்கொலை!!

கந்து வட்டி கொடுமை! நாகர்கோவிலில் 4 பேர் தற்கொலை!!

நாகர்கோவிலில், கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

நாகர்கோவிலில், கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

நாகர்கோவில் வடசேரி வஞ்சிமார்த்தாண்டம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் வடசேரியில் பிஸ்கட், சிகரெட் மொத்த விற்பனை செய்யும் ஏஜன்சி நடத்தி வருகிறார்.  இவர், தாயார் ருக்மணி, மனைவி ஹேமா, மகள் ஷிவானி ஆகியோருடன் தனி பங்களாவில் வசித்து வந்தார்.

சுப்பிரமணி, வியாபாரத்திற்காக பல  நபர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.  பணத்தை திரும்பக் கேட்டு சிலர் நெருக்கடி கொடுத்துள்ளனர்.  இதனால் மனம் உடைந்து குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து,  நால்வரும் தற்கொலை செய்து கொண்டனர்.

இது தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com