தேனி மாவட்டத்தில், வாலை இலை விலை அதிகரித்த வண்ணம் உள்ளது.
தேனி மாவட்டத்தில், வாலை இலை விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. திருமண நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் என வாழை இலையின் பயன்பாடு அதிக அளவில் இருப்பதால், ஆண்டு முழுவதும் தேனி மாவட்டத்தில் வாழை இலை அறுவடை நடப்பது வழக்கம்.
தற்போது, திருமண விழாக்கள் வருவதையொட்டி தேனியில் வாழை இலையின் விலை அதிகரித்துள்ளது.
ஒரு வாழைக்கட்டு ரூ.1000க்கு விற்பனையாகிறது. மேலும், 1250 வரை விற்பனையாக கூட வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில், மழை இல்லாமல் காற்று மட்டும் அதிகமாக வீசுவதால் சில நேரங்களில் வாழை இலைகள் அறுவடைக்கு கிடைக்காமல் போகும் சூழ்நிலையும் உள்ளதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.