தினமும் குடிச்சிட்டு அடிச்சதால், அவரை கொன்று புதைத்தேன் என்றும் வாக்குமூலம் கொடுத்தார்.
வேலூர் மாவட்டம், தாஜ்புரா மந்தைவெளியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் , 2 ஆண்டுகளுக்கு முன் இதே பகுதியைச் சேர்ந்த தீபிகா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். காதல் பரிசாக அவர்களுக்கு ஒரு வயதில் குழந்தையும் உள்ளது.
இந் நிலையில், கடந்த 13ஆம் தேதி தனது கணவரையும், குழந்தையையும் காணவில்லை என தீபிகா கூற, ராஜாவின் சகோதரி லட்சுமி, இது தொடர்பாக ஆற்காடு காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
போலீஸாருக்கு தீபிகா மீது சந்தேகம் எழு, அவரை தங்கள் பாணியில் விசாரித்ததும், ஆமாம், என் கணவரை நான் கொன்னு ஏரியில் புதைச்சுட்டேன் என்று தீபிகா கூறினார். மேலும், தினமும் குடிச்சிட்டு அடிச்சதால், அவரை கொன்று புதைத்தேன் என்றும் வாக்குமூலம் கொடுத்தார்.
இது குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.