இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்தது ஏன்..? கிருஷ்ணகிரி எஸ்.பி விளக்கம்

இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்தது ஏன்..? கிருஷ்ணகிரி எஸ்.பி விளக்கம்
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்தது ஏன் என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளார் சரோஜ்குமார் தாகூர் விளக்கமளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் எருது விடும் விழா அனுமதி வழங்க கோரி நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞரை லத்தியால் தாக்கியும், கூட்ஸ் காலால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உதைக்கும் படக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கோபச்சந்தரம் கிராமத்தில் எருது விடும் விழாவிற்கு அனுமதி வழங்கவில்லை என கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு போராட்டம் கலவரமாக மாறியது பேருந்துகள் தாக்கப்பட்ட நிலையில், போலீசார் கண்ணீர் புகை கொண்டு வீசியும், தடியடி நடத்தியும், போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரை கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் லத்தியால் தாக்குவதும், பூட்ஸ் காலால் உதைப்பதும் போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. 

பூட்ஸ் காலால் உதைக்கும் அதிகாரத்தை யார் வழங்கினர் என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு விளக்கமளித்துள்ள கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர், ‘’பெண் காவலரிடம் தவறாக நடந்த இளைஞர் தப்பிக்க முயன்றதால் அப்படி நடந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது’’என்று தெரிவித்துள்ளார்.


Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்