தமிழ்நாடு
குரூப் 4 தேர்வு முடிவுகள் பிப்ரவரியில் வெளியீடு!
குரூப் 4 தேர்வு முடிவுகள் பிப்ரவரியில் வெளியீடு!
குரூப் 2 எழுத்து தேர்வுகளுக்கான முடிவுகள் பிப்ரவரி 25ம் தேதி வெளியாகும்
2022ஆம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, டிசம்பர் மாதம் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் எனவும் ஜனவரியில் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் 15 தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகும் கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
அதில், குரூப் 4 தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியாகும் எனவும் குரூப் 2 எழுத்து தேர்வுகளுக்கான முடிவுகள் பிப்ரவரி 25ம் தேதி வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.