தமிழ்நாடு
கடற்கரை மணலில் புத்தாண்டு கொண்டாட தடை- சென்னை காவல்துறை.!!
கடற்கரை மணலில் புத்தாண்டு கொண்டாட தடை- சென்னை காவல்துறை.!!
வரும் 31ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் கடற்கரை மணற்பகுதிக்கு மக்கள் வரவேண்டாம் என அறிவுறுத்தல்
வரும் 31ஆம் தேதி இரவு சென்னை கடற்கரை மணற்பரப்பில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் மெரினா, சாந்தோம், பெசன்ட்நகர், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட கடற்கரை ஓரங்களில் புத்தாண்டு கொண்டாடங்களுக்கு அனுமதி இல்லை என்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதனால் வரும் 31ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் கடற்கரை மணற்பகுதிக்கு மக்கள் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.