பொங்கல் பரிசுப் பொருட்கள் அனுப்பப்பட்ட வாகனம் குப்பை வண்டியா? என்பது குறித்து வட்டாட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் குடும்ப அரிசி அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் அடுத்த மாதம் வழங்கப்பட உள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள வேட்டி, சேலைகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நியாவிலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைக்கு வட்டாட்சியர் செல்வம் தலைமையில் வேட்டி சேலைகள் அனுப்பப்பட்டது. இதில் பொங்கல் வேட்டி, சேலைகளை குப்பை அள்ளும் டிராக்டரில் அனுப்பியதாக வெளியான தகவல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து வட்டாட்சியர் செல்வம் கூறுகையில், “அந்த வண்டியில் சென்றது பொங்கல் பரிசு கிடையாது என்றும், வேட்டி,சேலை தான்” எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
வேட்டி, சேலைகளை குப்பை வண்டியில் கொண்டு செல்லலாமா என்ற கேள்விக்கு, பரிசுப் பொருட்கள் அனுப்பப்பட்ட வாகனம் குப்பை வண்டியா? என்பது குறித்து தனக்கு தெரியாது என்றும், இதுகுறித்து விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.