தமிழ்நாடு
குற்றாலம் அருவி வெள்ளத்தில் சிக்கிய சிறுமியை மீட்ட இளைஞர்-பதைபதைக்கும் காட்சிகள் வைரல்.!
குற்றாலம் அருவி வெள்ளத்தில் சிக்கிய சிறுமியை மீட்ட இளைஞர்-பதைபதைக்கும் காட்சிகள் வைரல்.!
குற்றால அருவிப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது வெள்ளத்தில் சிக்கிய சிறுமியை மீட்ட இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பழைய குற்றால அருவியில் தற்போது தண்ணீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் குடும்பத்துடன் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சிறுமி ஒருவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு சிறுமியை பத்திரமாக மீட்டார்.
இதைத்தொடர்ந்து சிறுமி சிறுகாயங்களுடன் தென்காசியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியை துரிதமாக மீட்ட இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.