பெண்கள் குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராமை சமீபத்தில் நீக்கி மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
இதையடுத்து, பாஜக நிர்வாகிகள் மற்றும் காயத்ரி ரகுராம் இடையே இணையத்தில் கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சமீபத்தில் கூட, பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி தனது ட்விட்டரில், காயத்ரி ரகுராமிற்கும் திமுகவிற்கும் ரகசிய தொடர்பு உள்ளதாக மறைமுகமாக சாடி இருந்தார்.
இதற்கு காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பதில் அளித்திருந்தார். இந்த நிலையில், காயத்ரி ரகுராம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், பெண்கள் மீது அவதூறு பரப்பும் பாஜக தலைவர் அண்ணாமலையின் வார் ரூம் மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். இதனால் மீண்டும் காயத்ரி ரகுராம் - அண்ணாமலை ஆதரவாளர்களிடையே இணையத்தில் வார்த்தைப் போர் எழும் சூழல் ஏற்பட்டுள்ளது.