தமிழ்நாடு
விருத்தாசலம் அருகே விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
விருத்தாசலம் அருகே விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியை கையும் களவுமாக கைது செய்தனர்
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பள்ளிப்பட்டு மற்றும் ரூப நாராயண நல்லூர் கிராம நிர்வாக அலுவலராக சுப்பிரமணி என்பவர் பணியாற்றி வருகிறார்.
ரூபநாராயண நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமதாஸ், நத்தம் பட்டா மாற்றத்திற்காக கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியை அணுகி உள்ளார்.இதற்கு சுப்பிரமணி, ரூ.14 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ராமதாஸ் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்ததின்பேரில் இன்று, லஞ்ச ஒழிப்புத் துறையினர் ராமதாசிடம் ரசாயனம் தடவிய 14 ஆயிரம் ரூபாயை கொடுத்து கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியிடம் கொடுக்க வைத்தனர்.
அதனை சுப்பிரமணி வாங்கும் பொழுது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சுப்பிரமணியத்தை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.