கிணற்றில் அழுகிய நிலையில் இருந்த கீர்த்தியின் உடலை போலீசார் கைப்பற்றினர்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தி(வயது 21). இவரை கடந்த 24 ஆம் தேதி காணவில்லை என அவரது பெற்றோர் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
போலீசார் கீர்த்தியின் நெருங்கிய நண்பர்களிடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் கடந்த ஆண்டு மது அருந்தும் போது கீர்த்திக்கும் அவருடைய நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை கொல்ல ஒரு வருடமாகத் திட்டம் போட்டு கடந்த மாதம் கீர்த்தியை கத்தியால் குத்தி கொலை செய்து அவரது உடலில் கல்லை கட்டி மாதா கோவில் அருகே உள்ள கிணற்றில் வீசியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கிணற்றில் அழுகிய நிலையில் இருந்த கீர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இளைஞரை கொலை செய்த பிரின்ஸ் (22), கோபி கிருஷ்ணா (19),சுதர்சன் (19), மற்றும் வினோத் (21)உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்து உத்தம பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.