தனியார் நிலத்திலிருந்த மின்சார கம்பத்திலிருந்து எதிர்பாரா விதமாக மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி, சிகாமணி ஆகியோர் தங்களுக்கு சொந்தமான 3 பசு மற்றும் 2 இளங்கன்றுகளை அதே பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் மேய்ச்சலுக்காகக் கட்டி வைத்துள்ளனர்.
அப்பொழுது தனியார் நிலத்திலிருந்த மின்சார கம்பத்திலிருந்து எதிர்பாராத விதமாக மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது.
இந்நிலையில் அறுந்து விழுந்த மின்கம்பியை மேய்ச்சலிலிருந்த மாடுகள் எதிர்பாராத விதமாக மிதித்த போது 5 மாடுகளும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன.
இதுகுறித்து தகவலறிந்த மின்சாரத் துறையினர் அப்பகுதியில் மின் இணைப்பைத் துண்டித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உமராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சம்பவ இடத்தில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் நேரில் சென்று மாட்டின் உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறினார்.