தமிழ்நாடு
தூத்துக்குடியில் திருமண ஆசைகாட்டி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!
தூத்துக்குடியில் திருமண ஆசைகாட்டி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!
17 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்
தூத்துக்குடியில் திருமண ஆசைகாட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் (25). இவர் தூத்துக்குடியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், தற்போது அந்தப் பெண் ஆறு மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், போலீசார் அறிவழகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.