தமிழ்நாடு
தொடர் உண்ணாவிரதம் : இடைநிலை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை
தொடர் உண்ணாவிரதம் : இடைநிலை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை
போராட்டம் தொடரும் என அறிவிப்பு
ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 3 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து,போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.