குழவிக்கல்லை தலையில் போட்டு மனைவி கொலை!

குழவிக்கல்லை தலையில் போட்டு மனைவி கொலை!
குழவிக்கல்லை தலையில் போட்டு மனைவி கொலை!

தலைமறைவான கணவரை பிடிக்க போலீஸ் தீவிரம்

உளுந்தூர்பேட்டை அருகே குழவிக்கல்லை தலையில் போட்டு மனைவியைக் கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை நம்பிக்குளத்தை சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 35).  இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிய நிலையில், நான்கு மகள்கள்  உள்ளனர். இந்நிலையில் பச்சமுத்து கேரளா, சென்னை, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று கூலி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் மது போதையில் இருந்து பச்சமுத்துக்கும் அவரது மனைவி செண்பகத்திற்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த பச்சமுத்து அருகில் இருந்த  குழவிக்கல்லைத் தூக்கி மனைவி செண்பகத்தின் தலையில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். 
இதில் பலத்த காயம் அடைந்த செண்பகம்  உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த செண்பகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இது குறித்து வழக்குப் பதிவு செய்த எலவனாசூர்கோட்டை போலீசார், தப்பி ஓடிய கணவர் பச்சமுத்துவை தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com