மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்
ராகுல் காந்தி பாரத்ஜோடோ யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் துவங்கி நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே, ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்பட்டதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த வாரம் யாத்திரை டெல்லிக்குள் நுழைந்தபோது, குறிப்பிடத்தக்கப் பாதுகாப்பு மீறல்கள் நடந்ததாகவும், நடைபயணத்தை வழிநடத்தும் ராகுல் காந்தியின் பாதுகாப்பை பராமரிக்க டெல்லி காவல்துறை தவறிவிட்டதாகவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணு கோபால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள துணை ராணுவப்படை, ராகுல் காந்தியின் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை என்றும் ராகுல் காந்தி பல சந்தர்ப்பங்களில், பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாகவும் இது தொடர்பாக அவ்வப்போது ராகுல் காந்தி தரப்பிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.