அமைச்சர் உதயநிதி சிறப்பாக செயல்படுவார் - முதல்வர் ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி சிறப்பாக செயல்படுவார் - முதல்வர் ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி சிறப்பாக செயல்படுவார்  - முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தை நோக்கி வரும் தொழில் நிறுவனங்கள்

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  ரூ.655 கோடி மதிப்புள்ள 5,639 புதிய திட்ட பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.308 கோடி மதிப்பில் 5951 புதிய பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.  

விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், " புதிய  துறைகளில் முதலீடுகள் ஈர்த்து வருகிறோம். தொழில் தொடங்க உலக நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வருகின்றன.  

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களின் வாழ்க்கை தரம் மேம்பாடு அடைந்துள்ளது. பெண்களுக்காக பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரே ஆண்டில் ஒரு கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். 

உதயநிதி, எம்எல்ஏ ஆன போது பல்வேறு விமர்சனங்கள் வந்தன. அதற்கெல்லாம் தனது செயல்பாடுகளால்  உதயநிதி பாராட்டு பெற்றார். 

உதயநிதிக்கு இளைஞர்கள் நலன், விளையாட்டு, சிறப்பு திட்டகள் செயலாக்கத்துறை போன்ற முக்கிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர் பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு இந்த துறைகளை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது" என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com