தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் இன்று புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கடக்க உள்ளதால் தமிகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் தற்போது சென்னை தென்கிழக்கே 350 கி.மீ தொலைவில் உள்ளது. தற்போது 12 கி.மீ வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று (டிசம்பர் 09) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்., தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை (டிசம்பர் 10) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்