சென்னையில் பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் மூடல்..!

மாண்டஸ் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை மாநகராட்சி பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும்வரை மூடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
புயல் மற்றும் கனமழை காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புயல் எச்சரிக்கை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெரினாவில் கடல் சீற்றம் அதிகம் இருப்பதால் பொதுமக்கள், வியாபாரிகள் என அனைவரையும் போலீசார் வெளியேற்றினர்.
இந்த நிலையில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் மூடப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே