தேனியில் 12 கிலோ கஞ்சாவுடன் 5 இளைஞர்கள் கைது!

தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த கோபி என்ற இளைஞர் கஞ்சா போதைக்கு அடிமையானது மட்டுமல்லாமல் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதுகுறித்தான தகவல் அறிந்த தெற்கு மண்டல ஐஜி தனி பிரிவு சார்பு ஆய்வாளர் கதிரேசன் தலைமையிலான காவலர்கள் தேனியில் இரண்டு கிலோ கஞ்சாவுடன் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும் கோபியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அல்லிநகரம் பாண்டியன் நகர் பகுதியில் வெங்கலா கோவில் தெருவை சேர்ந்த ராஜா என்பவர் வீட்டின் அருகாமையில் உள்ள புதரில் பிளாஸ்டிக் ட்ரம்மில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றி ராஜாவையும் அவருடன் இரண்டு இருசக்கர வாகனங்களில் பயணித்த ரேகுமார் முத்துராஜா மணிமுத்து ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
ஒட்டுமொத்தமாக 12 கிலோ கஞ்சாவுடன் இரண்டு இருசக்கர வாகனங்கள் கஞ்சா விற்பனை செய்த 14 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்து ஐந்து இளைஞர்களையும் சிறையில் அடைத்தனர்.
மேலும் முக்கிய குற்றவாளிகளான ராஜா ரேகுமார் கோபி மூவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் இவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி ஒருவருக்கு ஒருவர் நண்பர்களாக மாறி தற்போது விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே