வலங்கைமான் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிப்படுகொலை.!

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள வேப்பந்தகுடி கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பன் மகன் பன்னீர்செல்வம் (55 ) அரையூர் அதிமுக ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார்.இவரது அண்ணன் மகனுக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜயன் ( 23 ) தங்கையும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜயன் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர்க்கு இடையே தொடர்ந்து முன்விரோதம் வந்ததாகவும் இதில் ஊராட்சி மன்ற தலைவரை தீர்த்து கட்ட திட்டமிட்டார் விஜயன்.
அந்த வகையில் நீடாமங்கலம் கடைத்தெருவிற்கு வந்துவிட்டு கொட்டையூர் என்ற இடத்தின் அருகே பன்னீர்செல்வம் சென்ற போது, அங்கு வந்த மர்ம நபர்கள் இவரை கத்தியால் தலை உள்ளிட்ட பல இடங்களில் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருந்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இங்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டுள்ளது சிகிச்சை பலனிற்றி பன்னீர் செல்வம் உயிரிழந்துள்ளார் .மேலும் இச்சம்பவத்திற்கு காரணமான வேப்பத்தாங்குடியை சேர்ந்த விஜயனை வலங்கைமான் காவல்துறையினர் கைது செய்து முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதா வேறு ஏதேனும் காரணமா? என்பதும் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே